சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

chandrika-mahida_CI

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது நடவடிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக சந்திரிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

தம்மை சந்திக்க வரும் நபர்கள், தாம் சந்திக்கும் நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தம்மை பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளைஇ சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சந்திரிக்கா பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்இ இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய எந்தவிதமான சான்றுகளும் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டுவதாக, லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஹொரகொல்லவில் அமைந்துள்ள வீடுகளையோ அல்லது தொலைபேசி, இணையம் ஆகியவற்றையோ அரசாங்கம் கண்காணிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சடட்விரோதமான முறையில் கண்காணிக்கப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply