இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பதிவான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த ஆணைக்குழுவினர் தற்போது கிழக்கு மாகாணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான பல முறைப்பாடுகள் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணாமல் போதல் சம்பவங்களுக்கு இந்திய அமைதி காக்கும் படையினர் பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் 1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காணாமல் போதல் சம்பவங்கள் குறித்தே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார்.இந்திய அமைதி காக்கும் படையினர் 1987- 1990ம் ஆண்டு வரையில் இலங்கையில் நிலை கொண்டிருந்மை குறிப்பிடத்தக்கது

















