இந்திய கடற்பரப்பில் விமானத்தை தேடக்கூடாது! சீனாவை நிராகரித்த இந்தியா

Malaysian-Airlines-022

விமானத்தை தேடும் பணிக்காக இந்திய கடற்பரப்பில் போர்க்கப்பல்களை அனுமதிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம், 8ம் திகதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து அந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் 26 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானம் மாயமாகி 2 வாரங்களை எட்டியும், அதுதொடர்பாக உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்திய கடற்பரப்பில் விமானத்தை தேடும் பணிக்காக அந்தமான் கடல் பகுதியில், தங்கள் நாட்டு போர்கப்பல்கள் மற்றும் மீட்பு கப்பல்களை அனுமதிக்க வேண்டும் சீனா இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், அந்த பகுதியில் இந்திய கடற்படை ஏற்கனவே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதால் சீனா கடற்படை அனுமதிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் போர்கப்பல்கள் அனுமதி கேட்டது தொடர்பாக, பாதுகாப்பு படை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Tags: , ,

Leave a Reply