பார்ட்டி பண்ணுவது என்ற புதிய வார்த்தையை மட்டுமல்ல, ராத்திரியானால் பாட்டிலைத் திறப்பது என்ற புதிய கலாசாரத்தையும் இளைய தலைமுறை நட்சத்திரங்களிடம் ஆரம்பித்து வைத்த புண்ணியவான் பிரேம்ஜி.
இவருக்கு தினமும் குடித்தாக வேண்டும். அதிலும் ராத்திரியானால் குடித்தேயாக ஆக வேண்டும் என்கிற அளவுக்கு குடி நோயாளியாகவே மாறிவிட்டார் பிரேம்ஜி.
யாருக்கெல்லாம் குடிப்பழக்கம் இருக்கிறதோ, அது ஆணோ அல்லது பெண்ணோ…அவர்களை எல்லாம் சாமர்த்தியமாக தன் நட்பு வட்டத்துக்குள் இணைத்துக் கொள்வார் பிரேம்ஜி.
அவரைப் பொறுத்தவரை நண்பர்கள் என்பது ஓசி குடிக்கு.. ஒரு நாள் ஸ்பான்ஸர் அவ்வளவே!
இப்படி பல பேரை தன் குடிப்பழக்கத்துக்குப் பயன்படுத்தி வரும் பிரேம்ஜியின் நட்பு வட்டத்தில் புதிதாக ஒருவர் இணைந்திருக்கிறார்.
அவர்….சிம்பு.
இவருக்கும் குடிப்பழக்கம் உண்டுதான். ஆனால் பிரேம்ஜியைப்போல் தினமும் குடிக்கும் பழக்கம் சிம்புவுக்கு இருந்ததில்லை.எப்போதாவது பீர் அடிப்பதோடு சரி. அபூர்வமாக எப்போதாவது ஹாட் அடிப்பாராம்.
இதெல்லாம் பழைய கதை.
இப்போது சிம்புவுக்கு இப்படி எல்லாம் சான்றிதழ் கொடுக்க முடியாது.
ஏன்?
கடந்த சில வாரங்களாக, குறிப்பாக ஹன்சிகா உடனான காதல் தோல்விக்குப் பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்துவிட்டாராம் சிம்பு.
எத்தனை பிஸியான வேலையாக இருந்தாலும், ராத்திரியானால் காரை எடுத்துக் கொண்டு பிரபலமான அந்த பாருக்குக் கிளம்பிவிடுகிறாராம்.
அங்கே சிம்புவுக்காகக் காத்திருந்து, அவருக்கு சியர்ஸ் சொல்லி கம்பெனி குடுப்பது…வேறு யார்?
‘ஓசி குடி’ பிரேம்ஜிதான்…!
















