எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அந்த கட்சிகளுக்கு யோக்கியம் கிடையாது. தொற்றிக் கொள்வதற்கு இடம் இல்லை என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
தமது மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியினை கண்டி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரதிநிதிகளுக்கு அவற்றிற்கான ஆவணக் கோவைகளை பகிர்ந்தளித்த போதே ஊடகவியலாளர்களுக்கு அசாத்சாலி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எப்போதும் கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீ ல.மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஒன்று வரும் போது விழித்துக்கொள்வார்.
அண்மையில் மாளிகாவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் பேசும்போது பொதுபலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார்.
இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் சிலர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது?
17 ஆவது திருத்தச்சட்டத்தை தான் ஆதரித்ததன் மூலம் ஜனாதிபதிக்கு வாழ்நாள் பூராகவும் ஜனாதிபதியாகவிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ரவூப் ஹக்கீம் கூறி வந்த போதும் மாகாண சபை தேர்தல்களில் செல்வாக்குகளை இழந்து வருகின்றார்.

















