பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை – அரசாங்கம்

uk-flag

பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நிறுவப்பட்ட சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றைப் போன்றதொன்றை அமைத்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் பிரித்தானியா வலியுறுத்தியிருந்தது.

எனினும், இந்த கோரிக்கையின் மூலம் பிரித்தானியாவின் இலங்கை குறித்த தெளிவு அம்பலமாகியுள்ளது என இலங்கை அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தில் கரிசனை கொண்டிருந்தால் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்க வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை நிலைமைகளை சியரே லியோனுடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Tags: , ,

Leave a Reply