தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் 10 பார்வையற்ற கேரக்டர்கள் பட்டியல்.

gooku

கோலிவுட்டில் பார்வையற்றவர்களாக நடித்து பெரும் சாதனை செய்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். பாலும் பழமும், தங்கப்பதுமை போன்ற படங்களில் சிவாஜி கணேசனில் இருந்து தற்போது வெளிவந்துள்ள குக்கூ படம் வரை பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பார்வையற்றவர்களாக நடித்து கலக்கியுள்ளனர்.

இதில் டாப் 10 பார்வையற்ற கேரக்டர் பட்டியல் ஒன்றை பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியலில் மிகவும் பழைய படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவந்த படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

டாப் 10 பார்வையற்ற கேரக்டர்களில் நடித்த நடிகர், நடிகைகளின் பட்டியல் வருமாறு:

1. விக்ரம் படம்: காசி
2.பூஜா படம்: நான் கடவுள்
3.தினேஷ் படம்: குக்கூ
4.கமல்ஹாசன் படம்: ராஜபார்வை
5.ரேவதி படம்: அவதாரம்
6.மாளவிகா நாயர் படம்: குக்கூ
7.பசுபதி படம்: ராமன் தேடிய சீதை
8.பார்த்திபன் படம்: சுபாஷ்
9.விக்ரம் படம்: தாண்டவம்
10.சிம்ரன் படம்: துள்ளாத மனமும் துள்ளும்

ஆனால் இந்த பட்டியலில் 1982ஆம் வருடம் வெளிவந்த காதல் ஓவியம் படத்தின் நாயகன் கண்ணன் விடுபட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன. வேறு ஏதேனும் படங்கள் விடுபட்டுள்ளதா என்பதை நமது வாசகர்கள் கண்டுபிடித்து கமெண்ட் பகுதியில் தங்கள் கருத்தை பதிய செய்யவும்.

Tags: , ,

Leave a Reply