பூஜை போட்ட மறுநாளே ரூ.13 கோடிக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘டாணா’

daana

சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தை அடுத்து ‘டாணா” என்ற படம் சமீபத்தில் பூஜ போடப்பட்டது. இந்த படத்தை தனுஷ் தன்னுடைய Wunderbar Films என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா ஸ்ரீதிவ்யா நடிக்கின்றார். இவர்கள் இருவரும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை எதிர்நீச்சல் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை பூஜை போட்ட மறுநாளே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை தமிழகத்தின் முன்னணி டிவி நிறுவனம் ஒன்று ரூ.13 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதே நிறுவனம்தான் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.9 கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனையால் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ள தனுஷ், தனது நண்பன் சிவகார்த்திகேயனுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். இதனால் இன்ப அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் வெறும் ரூ.30,000 சம்பளம் பெற்று வந்த தனக்கு இப்படி ஒரு வாழ்வை கொடுத்ததே தனுஷ்தான் என்று பார்ப்பவர்களிடம் தனுஷ் புகழ் பாடி வருகிறார் சிவகார்த்திகேயன்

Tags: , ,

Leave a Reply