சி.வி.விக்னேஷ்வரனின் நிர்வாக கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை

vikineswaran5வடமாகாண நிர்வாக கட்டமைப்புகளில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனின் செயற்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை நேற்று பிறப்பித்தது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே.ஸ்ரீபவான், சத்யா ஹெட்டிகே ஆகியோர் இந்தத் தடை உத்தரவினை பிறப்பித்தனர்.

வடமாகாண பிரதம செயலாளரை பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஈடுபட்டு வருவதாகவும் நிர்வாக கட்டமைப்பு செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் பிரதம செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமி உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் குழு முதலமைச்சரின் நிர்வாக கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

Tags: ,

Leave a Reply