எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும், இம்முறை உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாட்டின் சில அரசியல்வாதிகள் நாட்டை காட்டிக் கொடுக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்,
மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியாத தரப்பினர் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் இந்த அரசாங்கத்தை கவிழ்;க்க முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
அரசியலைத் தாண்டி குரோத உணர்வுடன் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரமொன்றில் பங்கேற்ற உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
















