அன்னக்கிளி படத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜாவுக்கு பாலா இயக்கும் தாரை தப்பட்டை 1000 வது படமாம்.
1975 ஆம் ஆண்டு இசையமைக்க ஆரம்பித்த இளையராஜா, ஏறக்குறைய 39 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த 39 ஆண்டுகளில் இல்லாத வழக்கமாக, இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற அமைப்பை தொடங்க இருப்பதாக அண்மையில் இளையராஜா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 5 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் (IFC) துவக்க விழா நடைபெறுகிறது என்றும், இளையராஜாவின் மூத்த மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா இளையராஜா ஃபேன்ஸ் கிளப்பின் தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இளையராஜா தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
“கார்த்திக்ராஜாவுக்கு உள்ள வேலை பளு காரணமாக அவருக்கு பதில் பவதாரணி இளையராஜா ஃபேன்ஸ் கிளப்பின் தலைவராக செயல்பட உள்ளார்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துவக்க விழாவில் யுவன்ஷங்கர்ராஜா,கார்த்திக்ராஜா, பவதாரணி மற்றும் இளையராஜாவும் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கைவசம் ஒரு படம் கூட இல்லாமல் கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறார் கார்த்திக்ராஜா.
உண்மை இவ்வாறு இருக்க, கார்த்திக்ராஜாவுக்கு வேலைப்பளு உள்ளதாகச் சொல்வது மிகப்பெரிய காமெடி.
இதைக் காரணம் காட்டி, இளையராஜா ஃபேன்ஸ் கிளப்பின் தலைவராக பவதாரணி செயல்படுவார் என்று சொல்வதையும் நம்ப முடியவில்லை.
இளையராஜா வீட்டில் என்னமோ நடக்குது…
















