காத்திரமான படைப்புக்களை தம் கைவசம் வைத்துக்கொண்டு, அங்கீகாரத்திற்காகவும், அடையாளத்திற்காகவும் ஏங்கியபடி உலகின் மூலைகள் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் படைப்பாளிகளின் படைப்புக்களுக்கு முதல் மரியாதையை செய்வதற்காகவும், செங்கம்பளத்தின் மேல் வைத்து கலைத்தாயின் குழந்தைகளுக்கு மகுடம் சூட்டுவதற்காகவும், வெற்றி வானொலி, வணக்கம் லண்டன், Cloud மீடியா இணைந்து மிகப் பிரமாண்டமாய் நடாத்தும் உலகத் தமிழ் குறும்பட விழா 2014.
எம்மை ஊக்கிவிக்க ஊடகங்கள் இல்லையே என்ற இவர்களின் அங்கலாய்ப்பையும், மக்களிடம் தம் படைப்புக்களுக்கு மதிப்பில்லையே என்ற இவர்களின் மன ஓட்டத்தையும் உடைத்தெறிந்து உலக சினிமாவுக்குள் கால் பதிக்க, நம் கரம் கொடுத்து, வெளிச்சத்திற்கு கூட்டி வந்து, வெற்றிகளை குவிக்க பக்கபலமாய் நாம் இருப்போம் என்று சொல்வதற்காய் ஒவ்வொரு ஊடகத்தின் வருகைதனையும் நாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
காலத்தின் தேவைக்கேற்ப நம் கலைஞர்களுக்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமே எதிர் காலத்தில் இவர்களின் படைப்பாற்றலை வீச்சாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு விதை போடுவதற்காய் நாம் எடுக்கும் இப் பிரமாண்டமான விழாவிற்கு ஊடகத்தின் வருகை தான் எம் கலைத்துறையின் பாச்சலை வீச்சாக்கும் அதற்கான உங்கள் பங்களிப்பையும் நாடி நிற்கிறோம்.
குறிப்பு: மாலை 5 மணிக்கு எமது கலைஞர்களுக்கு செம்கம்பள வரவேற்பு வழங்கப்பட உள்ளது. தங்களது வருகையை 5 மணிக்கு முன்னர் நாம் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
உலகத்தமிழ் குறும்பட விழா குழுவினர்
















