கடந்த இரு வாரங்களாக அரிப்புத்துறையில் ஊரின் மையப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவம் தனியார் வீடுகளுக்குள்ளும், தனியார் வளவுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து அச்சத்தை ஏற்ப்படுத்துவதாக ஊர் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
அத்துடன் தேவைக்கேற்றவாறு வீதி விளக்குகளை அணைத்து இருளை ஏற்ப்படுத்துவதாகவும் இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் பெண்கள் சிறுவர்கள் வீடுகளில் தனியாக இருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் சிலாவத்துறை வைத்திய சாலையில் கடமையாற்றும் தனது மனைவியுடன் இரவில் வீடு நோக்கி வந்த குடும்பஸ்தரை 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடையொன்றிற்கு சென்று வரும் படி இராணுவம் கட்டளையிட்டதாகவும் அதுவரையும் குடும்பஸ்தரின் மனைவியை தான் காவல் செய்யும் அல்லிராணி கோட்டைக்கருகில் நிற்க வைத்ததாகவும் அக் குடும்பஸ்தர் மேலும் அச்சம் தெரிவித்தார்

















