இயக்குநர் பேரரரசு பாணியை பின்பற்ற ஆரம்பித்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

armurugadasதிரையுலகமே மூடநம்பிக்கையில் இயங்குவதுதான்.

திருப்பாச்சி என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமான பேரரசு மூடநம்பிக்கையாளர்களில் முதன்மையானவர்.

பேரரசுவின் திருப்பாச்சி படத்தின் வெற்றிக்கு திருப்பாச்சி என்று ஊர்ப்பெயரில் சூட்டப்பட்ட தலைப்புதான் காரணம் என்று அழுத்தமாக நம்பினார் பேரரசு.

அந்த நம்பிக்கையின் காரணமாகவே அவர் இயக்கிய படங்களுக்கு திருப்பதி, திருவண்ணாமலை, திருத்தணி, சிவகாசி, பழனி, தர்மபுரி என்று ஊர்ப்பெயர்களில் தலைப்பு வைத்தார்.

பேரரசு பாணியிலேயே தற்போது இன்னொரு இயக்குநரும் கிளம்பி இருக்கிறார்.

அவர்..ஏ.ஆர்.முருகதாஸ்.

துப்பாக்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்கிவந்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் ஐம்பது சதவிகிதம் முடிவடைந்தநிலையிலும் படத்துக்கு பெயர் சூட்டாமலே இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

துப்பாக்கி படத்தை இயக்கியபோது அத்தலைப்புக்கு ஒருவர் உரிமை கொண்டாடியதால் அல்லல்பட்ட அனுபவம், இந்தப் படத்துக்கும் வரக்கூடாது என்பதால் படத்தின் பெயரை அறிவிக்காமலே இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதிகாரபூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படாததினால்..துப்பாக்கி -2, வாள் என்றெல்லாம் ஊடகங்களில் சகட்டுமேனிக்கு யூகங்கள் செய்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் தன் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தலைப்பு என்ன தெரியுமா?

கத்தி.

துப்பாக்கியை அடுத்து கத்தியா? அடுத்தப்படத்தின் தலைப்பு என்னங்க? அரிவாள்மனையா?

Tags: , ,

Leave a Reply