ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? புட்டு புட்டு வைக்கிறார் கருணாநிதி

karunanidhi

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று தி.மு.க.-வின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார்.

தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும், பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கேள்விப்படும் போது, ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். அந்த வழக்கறிஞரே, அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர், நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ளார்

Tags: , , ,

Leave a Reply