ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலையாகவும் 24 நாடுகள் வாக்களித்தமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற வாக்களிப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும், நடுநிலையாக 12 வாக்குகளும் கிடைத்ததை தொடர்ந்து பிரேரணை வெற்றி பெற்றது.
ஆயினும் 47 அங்கத்துவ நாடுகளில் எதிராகவும், நடுநிலையாகவும் சேர்த்து 24 நாடுகள் இலங்கையின் விளக்கங்களில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இறுதி நிமிடம் வரை நாடுகளை தன் பக்கம் இழுத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயன்றும், தோல்வி கண்டதை தொடர்ந்து, இப்படியான சமாளிப்பு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

















