பிரதேச சபை மண்டபக் கதவை உடைத்த உறுப்பினர்கள் : டக்ளசின் நேரடி நெறிப்படுத்தலில் அடாவடி

daklas

அமைச்சர் டக்ளசின் உத்தரவின் பேரில் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 12 பேர் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தை சட்டவிரோதமாக உடைத்து உள்நுழைந்தனர். அதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வலி.கிழக்குப் பிரதேச சபையின் மார்ச் மாத சபை அமர்வு உப தவிசாளர் தலைமையில் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கூட்டத்தை நடத்தவேண்டாமென உள்ளுராட்சி செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எனினும் வலி.கிழக்கு பிரதேச சபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சபை அமர்வை நடாத்தக் கோரி இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்தார். குறித்த உறுப்பினர்களை கூட்டத்தை நடத்த அனுமதிக்குமாறு அவர் வலி.கிழக்கு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும் உள்ளுராட்சி செயலாளரின் அனுமதி கிடைத்தால் மாத்திரமே பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தை திறந்து உறுப்பினர்களை உள்ளே அனுமதிக்க முடியுமென்று பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து மாநாட்டு மண்டபக் கதவை உடைத்து உள்ளே நுழையுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார் அமைச்சர். உடனேயே 12 உறுப்பினர்களும் கதவை உடைத்து உள்நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்தனர்.

Tags: , ,

Leave a Reply