வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளும் திட்டம் கிடையாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக படையினர் நிலைநிறுத்தப்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலி பீதியை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

















