புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் – ஜெயலலிதா

jaya4

புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply