அம்மா உணவகத்தில் சுடச் சுட பிரியாணியா? பறந்தது பறக்கும் படை

amma_briyani_002

அம்மா உணவகத்தில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் தேர்தலை முன்னிட்டு விதிமுறைக்கு புறம்பாக அசைவ விருந்து வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் வள்ளி கண்ணு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்ததில், அசைவ உணவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரியவந்தது.

மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply