தந்தைக்கு 10 வருடங்கள் சிறைதண்டனை அளித்த நீதிபதிக்கு நன்றி தெரிவித்த 7 வயது சிறுமி.

judge

தனது தந்தைக்கு 10 வருட சிறை தண்டனை கொடுத்த லண்டன் நீதிபதிக்கு 7 வயது சிறுமி ஒருவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏனெனில் அந்த தந்தை, அவருடைய தாயை கொடூரமாக கொலை செய்தவர் என்பதால்தான் இந்த நன்றி என கூறப்படுகிறது.

லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் Mr Justice Keehan என்பவருக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை ஏழு வயது சிறுமி ஒருவர் எழுதியுள்ளார். அவருடைய பெயர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

தனது தாயாரை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு 10 வருடங்கள் சிறைதண்டனை கொடுத்த தீர்ப்புக்காக தான் நன்றி தெரிவித்து கொள்வதாக அந்த சிறுமி நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கொலை வழக்கில் சிறுமிதான் முக்கிய சாட்சியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதத்தை பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்ட நீதிபதி, தற்போது தாய், மற்றும் தந்தையின் துணையில்லாமல் இருக்கும் அந்த 7 வயது சிறுமிக்கு ஆதரவு கொடுக்க யாராவது முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கைக்கு பின்னர் அந்த சிறுமியை தத்தெடுக்க சமூக வலைத்தளங்கள் மூலம் பலர் முன்வந்துள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply