மினுமினுத்தவெளி காட்டுப் பகுதியில் யானை தாக்கி 75 வயதுடைய பெண் பலி

elefant-womகிரான் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட மினுமினுத்தவெளி காட்டுப் பகுதியில் யானை தாக்கி 75 வயதுடைய பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மாங்கேணி பாம்கொலணி என்ற இடத்தைச் சேர்ந்த பத்மன் பொன்னம்மா என்ற வயோதிவப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண்ணும் அவரது கணவரும் தேன் எடுப்பதற்காக கிரான் பிரதேச மினுமினுத்தவெளி காட்டுப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ,

Leave a Reply