ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.தீர்மனம் நிறைவேற்றப்பட்டதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.விரைவில் ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் எனவும், அவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கைக்கு வெளியே விசாரணை பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டால் அதனை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

















