1983ம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் மட்டுமே தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அரந்தலாவை படுகொலைச் சம்பவம்இ ஸ்ரீ மா போதி மற்றும் தலா மாளிகை மீதான தாக்குதல்கள் தொடர்பிலான சம்பவங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானத்தை சமர்ப்பித்த மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகளுக்கு இலங்கையின் நிலைமைகள் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களின் மனோ நிலையில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சக்திகளுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே வலுவான ஓர் தலைமைத்துவம் அவசியம் என வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

















