இலங்கை இராஜதந்திர அணுகுமுறைகளில் மாற்றம்?

sri_lanka_flag

இலங்கை இராஜதந்திர அணுகுமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இராஜதந்திர உறவுகளைப் பேணுவது தொடர்பில் அரசாங்கம் கமிட்டி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளது.

இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்த கமிட்டி அமைக்கப்பட உள்ளது.

குறித்த கமிட்டியை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இந்த வாரத்தில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் கடமையாற்றிய இலங்கையின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மானம் தோல்வியடைவதற்கு அரசாங்கத்தின் இராஜதந்திர உறவுகளில் நிலவிய குறைபாடுகளே காரணம் என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply