Jolla நிறுவனமானது Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான புத்தம் புதிய இயங்குதளம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருந்தது.
Sailfish OS எனப்படும் இப்புதிய இயங்குதளமானது கவர்ச்சிகரமான ஐகான்களை கொண்டுள்ளதுடன், மேலும் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

















