அரசை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கும் நேரம் ஜே.வி.பி.தலைவர்

Anurakumara-Dissanayake2

ஜெனிவாவை காட்டி தேர்­தலில் வெற்றி பெற முயற்­சித்த அர­சாங்­கத்­திற்கு பொது­மக்கள் பாரிய பின்­ன­டைவை பெற்­றுக்­கொ­டுத்து தகுந்த பாடத்தை கற்­பித்­துள்­ளனர். எனவே ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்தும் முயற்­சி­களை அர­சாங்கம் இப்­போ­தைக்கு முன்­னெ­டுக்கப் போவ­தில்­லை­யெனத் தெரி­வித்த ஜே.வி.பி தலைவர் அநுர திஸா­நா­யக்க இனி அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் போராட்­டத்தை ஆரம்­பிக்க வேண்­டிய காலம்
வந்­து­விட்­ட­தா­கவும் எனவே பிரிந்­த­வர்கள் அனை­வரும் மீண்டும் இணைய வேண்­டு­மென்றும் பகி­ரங்க அழைப்­பையும் அவர் விடுத்தார்.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடி­வுகள் தொடர்­பாக தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் தலை­வரும்இ எம்.பி. யுமான அநுர திஸா­நா­யக்க இதனைத் தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கடந்த காலத் தேர்­தல்­களில் எமது கட்சி சிறிது பின்­ன­டைவைக் கண்ட போதும் தற்­போது நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்­தல்­களில் மக்கள் எமக்கு வெற்­றியை பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

இது மக்கள் மத்­தியில் நாம் கொண்டு சென்ற கொள்­கைக்கு கிடைத்த வெற்றி மட்­டு­மல்ல அர­சாங்­கத்தின் மக்கள் எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு கிடைத்த பதி­ல­டி­யாகும்.

இம் மாகாண சபை­களின் ஆட்­சி­ய­தி­கார காலம் இருக்­கையில் பலாத்­கா­ர­மாக கலைத்து தமது அர­சியல் இருப்பை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே அர­சாங்கம் தேர்­தலை நடத்­தி­யது.

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ரணை கொண்டு வரும் நாளை இலக்­காக வைத்தே தேர்தல் நடத்­தப்­பட்­டது.

இப் பிரே­ரணை மூலம் நாட்­டுக்கு ஏற்­படும் அகெ­ள­ரவம், அப­கீர்த்தி மற்றும் ஏற்­படும் நெருக்­க­டி­களை அர­சாங்கம் சிந்­திக்­க­வில்லை.

அதற்கு முகம் கொடுத்து நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­காது அர­சியல் இருப்­புக்­காக தேர்­தலை நடத்­தி­யது.

ஜெனீ­வாவில் தோற்­றாலும் எனக்கு பிரச்­சி­னை­யில்லை ஆனால் மாகாண சபைத் தேர்­தல்­களில் எனக்கு வெற்றி கிடைக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே தெரி­வித்­தி­ருந்தார்.

இதன் மூலம் ஜனா­தி­ப­தியின் சுய­ரூபம் வெளிப்­ப­டு­கி­றது. அத்­தோடு ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் விதத்தில் மக்கள் இத் தேர்­தலில் அர­சாங்­கத்­திற்கு அமோக வாக்­கு­களை பெற்றுக் கொடுத்து வெற்றி பெறச்­செய்ய வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

ஆனால் இத்­தேர்­தலில் மக்கள் அவ் வேண்­டு­கோளை நிரா­க­ரித்து கடந்த கால தேர்­தல்­களை விட 2,65,000 வாக்­கு­களை குறைத்­துள்­ளனர்.

விசே­ட­மாக ஜனா­தி­ப­தியின் கோட்­டை­யாகக் கரு­தப்­படும் அம்­பாந்­தோட்­டையில் இம் முறை அர­சாங்­கத்­திற்­கான வாக்­குகள் நூற்­றுக்கு 13சத­வி­கிதம் குறைந்­துள்­ளது.

அரசின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய மக்கள் ஜெனீவா பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளித்­த­தாக தெரி­ய­வில்லை. மாறாக அதனை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே தெரி­கி­றது.

மேல் மாகாணம்

நாட்டின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை மேல் மாகாண சபை தேர்தல் பெறு­பே­று­களே தீர்­மா­னிக்கும்.
இம் முறை அர­சாங்­கமும் இம் மாகா­ணத்தில் பாரிய பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.

கடந்த மேல்­மா­காண சபையில் அரச தரப்பில் 68 உறுப்­பி­னர்கள் இருந்­தனர். இன்று அது 56ஆகக் குறைந்­துள்­ளது. 12 உறுப்­பி­னர்கள் குறைந்­துள்­ளனர்.

எங்­க­ளுக்கு கடந்த மாகாண சபையில் 3 உறுப்­பி­னர்கள் இருந்­தனர். இம் முறை அது 6ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது எமக்கும் எமது கொள்­கைக்கும் ஆட்சி மாற்­றத்­திற்­கான போராட்­டத்தை ஆரம்­பிப்­ப­தற்­கான மக்கள் வழங்­கிய வெற்­றி­யாகும்.இதற்­காக மக்­க­ளுக்கு எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறோம்.

இலங்­கையின் தேர்­தல்கள் வர­லாற்றில் அதி­க­ளவில் அரச வளங்­களும், அரச அதி­கா­ரி­களும் பயன்­ப­டுத்­தப்­பட்ட தேர்தல் இது­வாகும்.

இதற்கு முன்­னு­தா­ர­ண­மாக ஜனா­தி­ப­தியே இருந்தார். அனைத்து தேர்­தல்கள் சட்­டத்­தையும் மீறி அமைச்­சர்­க­ளுக்கும் வழி காட்­டினார்.

எமக்கு கிடைத்த இந்த வெற்­றி­யா­னது நாட்டின் அர­சியல் திசை மாறு­வ­தற்­கான ஆணை­யாகும்.

இனி ஜன­நா­யக விரோ­த­மான இந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் போராட்­டத்­தினை ஆரம்­பிக்க வேண்­டிய காலம் வந்து விட்டது. எனவே எம்மை விட்டு பிரிந்தவர்கள் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எம்மோடு இணையுமாறு இத் தருணத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த மக்கள் அரசாங்கத்திற்கு புகட்டிய பாடம் அதன் தேர்தல் நடத்தும் வரைபடத்தையே மாற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இப்போதைக்கு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply