மோட்டார் சைக்கிள் விபத்தொன்றால் கடந்த 16 வருட காலமாக தனது கரத்திலுள்ள எலும்பில் ஏற்பட்ட கடும் வலியை மருத்துவர்கள் குணப்படுத்த தவறியதால் சினமடைந்த நபரொருவர் வீட்டில் தன்னால் உருவாக்கப்பட்ட வெட்டும் உபகரணத்தால் கரத்தை துண்டித்த விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
டெவொன் பிராந்தியத்திலுள்ள நியூடன் அப்பொட் நகரைச் சேர்ந்த மார்க் குட்டார்ட் (44 வயது) என்ற நபரே இவ்வாறு தனது கரத்தின் மணிக்கட்டுக்கு கீழான பகுதியை வெட்டி துண்டித்துள்ளார்.
அந்நபர் துண்டிக்கப்பட்ட தனது கரத்தை தனது வீட்டின் தோட்டத்தில் தன்னால் வளர்க்கப்பட் தீயில் வீசியுள்ளார்.
அவர் துண்டிக்கப்பட்ட கரப்பகுதியால் 2 பைந்து அளவான குருதி வெளியேறிய நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
தற்போது கரத்தை வெட்டியதால் மென்மேலும் வலி அதிகரித்துள்ளதால் தனது வலியை மருத்துவர்கள் குணப்படுத்தத் தவறினால் தான் தனது முழு கரத்தையுமே வெட்டி துண்டிக்கப் போவதாக மார்க் கோட்டார்ட் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

















