அரசாங்கத்திடம் குறைகள் இருக்கலாம். அரசாங்கத்தின் தவறுகளை கண்டறிந்து, அதன் எதிர்கால வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய அரசாங்கத்தின் வழிமுறைகளை மாற்ற தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தென் மற்றும் மேல் மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்கள் வழங்கும் சமிக்ஞைகளை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள விரும்பும் அரசாங்கமாகும்.

















