இலங்கை – இந்திய உடன்படிக்கையை நாட்டின் இறையாண்மையின் கேடயமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும் எனவும், முழு இந்தியாவையும் எதிராக கருதி செயற்பட்டால், தமிழகத்தின் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கடந்த காலங்களில் உரிய முறையில் செயற்பட்டதை காண முடியவில்லை.
அதேபோல் விடுதலைப் புலிகளின் போர் இயந்திர கட்டமைப்பை முற்றாக தோற்கடித்த போதிலும் புலிகளின் மேலதிக சர்வதேச சக்தியை தோற்கடிக்கவில்லை என்பதை அரசாங்கம் மறந்து விட்டது.
சர்வதேசத்தில் உள்ள புலிகளின் சக்திகள் பாரிய முன்னணியாக செயற்பட்டனர். இந்த முன்னணியில் ஒரு பகுதியினர் தமிழகத்தில் இருக்கும் இனவாத அரசியல் நிரோட்டத்தை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் உதவியின்றி இந்த சர்வதேச சக்திகளை தோற்கடிக்க முடியாது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வந்ததுடன் பேசப்பட்டு வந்த கருப்பொருளாகவும் இருந்தது.
ஜெனிவாவில் இந்தியா இம்முறை என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பற்றி அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இப்படியான சூழ்நிலையில், இந்தியா – .இலங்கை இடையிலான தொடர்புகள், இரு நாடுகள் சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக ஆராயந்து பொருத்தமான நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்பதை புதிதாக கூறவேண்டியதில்லை என்றும் தயான் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

















