அனைத்து இந்திய மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் – இலங்கை

srilankan fishers

இலங்கை கடற்பரப்பில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்களும் எதிர்வரும் சில தினங்களுக்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 40 பேரும், அவர்களின் 18 படகுகளும் இந்தியாவிடம் ஒப்படைக்ககப்படவுள்ளன. தமிழக மீனவர்கள் 40 பேர் மாத்திரமே இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களும் இந்தியாவை சென்றடைந்துள்ளனர். இவர்களில் 58 மீனவர்களும், அவர்களது 13 படகுகளும் காங்கேசன்துறையில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய 20 இந்திய மீனவர்களும், 7 படகுகளும் காங்கேசன்துறை கடலில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் சிலரும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply