இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இலங்கை அரசுக்கோ மஹிந்தவுக்கோ அக்கறை இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

vicki-mahi2

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ இலங்கை அரசுக்கோ அக்கறை இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று நிகழ்த்திய பேர்னாட் சொய்ஸா நூற்றாண்டு நினைவுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் முன்வைத்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாததால்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருப்பதாக அவர் போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாட்டங்களில் இராணுவத்தின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் மாத்திரமே அரசாங்கம் அக்கறைக் கொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறும் சிங்கள மக்களுக்கு இலவசமாக காணிகள் பகிரப்படுவதாகவும், அது தொடர்பாக இராணுவத்தினரால் வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply