நயன்தாரா கர்ப்பத்தில் சர்ச்சை. இயக்குனருடன் கடும் மோதல்.

nayan

வித்யாபாலன் நடித்து பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய கஹானியின் தமிழ் மற்றும் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர், இந்த படத்தில் நடிக்கும்போது நயன்தாரா கொடுத்த தொல்லைகள் குறித்து தற்போது இயக்குனர் சேகர் கம்முலா வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். இதனாலு தெலுங்கு படவுலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கஹானியின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஒரு கர்ப்பிணி பெண் தனது கணவரை தேடும் கதைதான். ஆனால் தமிழ் மற்றும் ஹிந்தி ரீமேக்கில் ஒப்பந்தமான நயன்தாரா , முதலில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க முடியாது. கர்ப்பம் இல்லாமல் இருக்கும் சாதாரண பெண் போல கதையை மாற்றுங்கள் என்று கட்டாயப்படுத்தினார். மேலும், படப்பிடிப்பிற்கு தினசரி தாமதமாகவே வருவார். ஒருநாள் கூட சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு அவர் வந்ததில்லை. வேறு வழியில்லாமல் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டேன் என்று இயக்குனர் சேகர் கம்முலா மனம்திறந்து பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா அளித்த விளக்கத்தில் இயக்குனர் வேண்டுமென்றே என் மீது வீண்பழி சுமத்துகிறார். 10 வருடங்களாக சினிமாவில் இருக்கும் நான் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பிற்கும் தாமதமாக சென்றதில்லை. கர்ப்பிணியாக நடிக்க முதலில் தயங்கியது உண்மைதான். அதன்பிறகு கதையின் முக்கியத்துவம் கருதி, பின்னர் கர்ப்பிணியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நயன்தாரா மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு மோதுவது போன்று நடிப்பதாகவும், டோலிவுட்டில் கிசுகிசு கிளம்பி வருகிறது.

Tags: , ,

Leave a Reply