காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்தான இறுதி தொடர்பாடல் வார்த்தையில் மாற்றம்

malaysia-airlines-phone-ringing-no-answers

காணாமல் போன மலேசிய எம்.எச். 370விமானத்திலிருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதித் தொடர்பாடல் வார்த்தை குறித்து திருத்தமொன்றை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த விமானத்திலிருந்து இரவு வணக்கம் மலேசியா 370 மற்றும் அனைத்தும் சரியில்லை இரவு வணக்கம் என்பதே இறுதி வார்த்தையாக கூறப்பட்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

மேற்படி இறுதி வார்த்தை துணை விமானியால் கூறப்பட்டது என்பது தொடர்பில் தடயவியல் நிபுணர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.

இதற்கு முன் அந்த விமானத்திலிருந்து கடைசியாக கேட்கப்பட்ட இறுதி வார்த்தை எல்லாம் சரி, இரவு வணக்கம் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் மேற்படி விமானத்திலிருந்தான இறுதி வார்த்தை ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்தோ, அந்த வார்த்தை குறித்து சரியாக தீர்மானமெடுக்க அதிகாரிகள் ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பது குறித்தோ தெளிவற்ற நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.

Tags: , , ,

Leave a Reply