கருணாநிதிக்கு வருமா? என்ன நினைக்கிறீர்கள்? வருமா?

jaya4

இலங்கை பிரச்சனையை சுட்டிக் காட்டி வாக்குகளை வாங்குவதற்கு கருணாநிதி முயற்சிப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது குறித்து கருணாநிதி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் இறுதியாக இந்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாக கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளார் கருணாநிதி.

இவர் கண்டிப்பது இருக்கட்டும்! இந்த மனிதநேயமற்ற காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் ஆதரிக்க மாட்டேன் என்று கருணாநிதி ஏன் சொல்லவில்லை? இனிமேலாவது அவ்வாறு கூறும் துணிவு கருணாநிதிக்கு வருமா? என்ன நினைக்கிறீர்கள்? வருமா? வராது. எப்படி வரும்?

உங்களின் வாக்குகளை வாங்குவதற்காக, இலங்கை பிரச்சனையை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளி வந்ததாக சொன்ன கருணாநிதி, உங்களை ஏமாற்றி உங்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்றும், அதன் மூலம் மீண்டும் உங்களை ஏமாற்றலாம் என்றும் நினைக்கிறார்.

தன்னலத்திற்காக தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க-விற்கு வருகின்ற தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?” என்றார் ஜெயலலிதா.

Tags: , ,

Leave a Reply