உடற்பாகங்கள் திருடப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் பெண்கள்

arab

இலங்கை பிரைஜைகள் 20 பேரினுடைய சடலங்கள் அனுப்பி வைக்கப்படாது சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், காணப்படுவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 30 வயதிற்குக் குறைவான 75 சதவீத பெண்களின் சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும். அத்துடன், அவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்ற சடலங்களில் பெரும்பாலானவற்றில் உள்ளக அவயங்கள் காணாமற் போயுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில். இந்த உயிரிழப்புக்களில் அதிகளவானவை மாரடைப்பினால் ஏற்பட்ட சாவு என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக சென்று உயிரிழந்த இலங்கைப் பெண்கள் குறித்து, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை வர்த்தக சங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை உயிரிழக்கும் இருவரின் சடலங்களை உறவினர்களுக்கு வழங்குவதற்காக, நாளாந்தம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply