எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது – விக்ரமபாகு கருணாரட்ன

Vickramabahu

எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்றிவிட முடியாது என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகள், அரசாங்கத்தின் மீதான மக்கள் அதிருப்தியை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாக் காலங்களிலும் தேசப்பற்று பிரச்சாரத்தின் மூலம் சிங்களப் பெரும்பான்மை மக்களை ஏமாற்றி திசை திருப்ப முடியாது என்ற செய்தி தேர்தல் முடிவுகளின் மூலம் ஆளும் கட்சிக்கு உணர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளை சுவீகரிக்க முடியும் என ஆளும் கட்சி போட்ட கணக்கு, இம்முறை தேர்தலில் பிழைத்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானது ஆளும் கட்சியின் வாக்குகள் அதிகரிக்க ஏதுவாக அமைந்தது என்பதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமர்வுகள் நடைபெற்றிருக்காவிட்டால் ஆளும் கட்சி மேலும் பாரிய தோல்வியை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் என அவா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசாங்கத்திற்கு பதிலீடாக மக்களினால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றியீட்டிய ஜே.வி.பி மற்றும் ஜனநாயக் கட்சி ஆகிய இரண்டுமே அதிகாரப் பகிர்விற்கு எதிரான கட்சிகள் என அவா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளுமே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சிறுபான்மை கட்சிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கான வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply