இலங்கையின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றாராம் அனந்தி; குற்றஞ்சாட்டுகின்றது இலங்கை அரசு

Ananthy-Sasitharan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற் சிக்கின்றார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது இலங்கை அரசு.

இலங்கை தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“அனந்தி சசிதரனால் இலங்கை தொடர்பில் தவறான தகவல்கள் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் புலிகள் சார்பு நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகின்றார்” என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியான அனந்தி, கடந்த வாரம் நடந்த ஐ.நா மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

போரின் போதும் போருக்கு பின்னரும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவ தாக குற்றம் சுமத்திய அனந்தி சசி தரன், நாட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

Tags: , ,

Leave a Reply