பாசிக்குடாவில் இருந்து கொழும்புக்கு பஸ் சேவை

bus5வாழைச்சேனை பாசிக்குடா பிரதேசத்திற்கு வருகை தரும் உள்ளாசப் பிரயாணிகளதும், பாசிக்குடாவை அண்மித்த கிராம மக்களினதும் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை போக்குவரத்து சபையினால் செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு பாசிக்குடாவில் இருந்து கொழும்புக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு வாழைச்சேனை போக்குவரத்து சபையின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார, வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மா.புஸ்பராசா குருக்கள், மௌலவி எம்.எஸ்.அப்துல் ஹமீட், பாசிக்குடா பிரதேசத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை போக்குவரத்து சபையினால் நடாத்தப்பட்ட வாழைச்சேனை கொழும்பு இரவு நேர சேவை 1999ம் ஆண்டு நிறுத்தப்பட்டு 15 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சேவையினால் வாழைச்சேனை, கல்குடா, பேத்தாழை, பாசிக்குடா, கல்மடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பஸ் சேவை தினமும் 8.30 மணிக்கு பாசிக்குடா சந்தியில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும். அதேபோன்று கொழும்பில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு ஓட்டமாவடி, வாழைச்சேனை, பாசிக்குடா ஊடாக காத்தான்குடி வரை செல்லும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply