விஷாலுக்காக விட்டுக்கொடுத்த வடிவேலு. ஒருவாரம் தள்ளிப்போகிறது தெனாலிராமன்.

thenaaliraman

விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துடன் ரிலீஸ் ஆகவிருந்த வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ படம் திடீரென ரிலீஸ் தேதியை ஒருவாரத்திற்கு தள்ளி வைத்தது. புதிய தகவலின்படி ‘தெனாலிராமன்’ ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

UTV தென்னந்திய மேலாளர் தனஞ்செயன், ‘தெனாலிராமன்’ தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் நேற்று பேச்ச்வார்த்தை நடத்தினார். இருபடங்களும் வெற்றி பெறும் என பொதுவான எதிர்பார்ப்பு இருப்பதால் இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்றும், எனவே ஒருவார இடைவெளி வேண்டும் என்றும் தனஞ்செயன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி ஏ.ஜி.எஸ் நிறுவனம் தங்கள் படத்தின் ரிலீஸை ஒருவாரத்திற்கு தள்ளி வைத்தார்.

மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் வரும் வடிவேலுவில் படம் என்பதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தியேட்டர்கள் புக் ஆகி வருகிறது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

Tags: , ,

Leave a Reply