ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக களமிறங்க தயாராகும் முக்கிய அமைச்சர்?

parliament

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் தயாராகி வருவதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது வேட்பாளராக தன்னை நிறுத்தினால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட தான் தயாராக இருப்பதாக அந்த அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் இந்த கோரிக்கை தொடர்பில் தெளிவான வாக்குறுதி எதனையும் வழங்காத ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் ஒப்புதலோடு, வெளிநாட்டில் இருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை சந்திப்பதற்காக உடனடியாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ராஜபக்சவினரின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு உரிய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர், தனக்கு ஆதரவாக 22 அமைச்சர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தனக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்களுடன் அரசாங்கத்தில் இருந்து விலக அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply