பல வருடங்கள் பின்னடைவுகளை சந்தித்து வந்த ஜே.வி.பி மீண்டும் எழுச்சியடைந்து வருவது குறித்து ஜனாதிபதியும் அவரின் நம்பிக்கைக்குரியவர்களும் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜே.வி.பியின் மீள் எழுச்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியல்ல என ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவர்களும் ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.
ஜே.வி.பியின் மீள் எழுச்சியை அடுத்து அந்த கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சோசலிசக் கட்சியினர், அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கட்சியை சேர்ந்தவர்கள், ஜே.வி.பியில் மீண்டும் இணைந்து கொள்ளக் கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரத் பொன்சேகா மற்றும் ஜனநாயகக் கட்சியின் எழுச்சியானது குறுகிய கால ஆயுளையே கொண்டிருக்கும் எனவும் ஆனால் ஜே.வி.பியின் எழுச்சி அப்படியானதல்ல என்றும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜே.வி.பியை இலக்கு வைத்து அரசியல் ரீதியான தாக்குதல்களை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படயில், ஜே.வி.பியின் புதிய தலைவர் மற்றும் அதன் கொள்கை குறித்து அரசியல் ரீதியான தாக்குதல்களை தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

















