இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக் கடற்பரப்பில் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களும் அவர்களது படகையும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் இந்த படகு மீன்பிடிப்பதற்காக பயணித்துள்ளது. ரன் முத்து துவ என்ற படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகில் நான்கு தொன் எடையுடைய துனா மீன்கள் காணப்பட்டதாகவும், அதனையும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

















