பகத்பாசில் குடும்பத்தினர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்கனவே நடிக்க கமிட்டான படங்களின் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டாராம் நஸ்ரியா.
19 வயதே ஆன நஸ்ரியா தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘ராஜா ராணி’ படங்களில் நடித்தார். இன்னும் அவருக்கு தமிழில் திருமணம் என்னும் நிஹ்ஹா, வாயை மூடிப் பேசவும் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன.
மிக குறுகிய காலத்தில் தமிழ்சினிமாவில் தனி இடத்தைப் பிடித்த நஸ்ரியா திடீரென்று பிரபல மலையாள ஹீரோ பகத் பாசிலை காதல் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.
வாயை மூடிப் பேசவும் ஆடியோ பங்ஷனில் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க பகத் ஓ.கே சொல்லி விட்டார். அதனால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
அப்படி சொன்ன நேரமோ என்னமோ, திடீரென்று நஸ்ரியா தான் ஏற்கனவே கமிட் செய்த படங்களுக்கான அட்வான்ஸை பைசா பாக்கியில்லாமல் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் திருப்பி கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க பகத்தின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பை கிளப்புவதுதானாம்.
இதனால் வேறு வழியில்லாமல் புதிய படங்களையும் அவர் கமிட் செய்யவில்லை. தமிழில் பார்த்திபன் டைரக்ட் செய்து வரும் திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் நடிக்கவில்லை என்பதால் அந்த கேரக்டரையே படத்திலிருந்து தூக்கிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம் பார்த்திபன்.

















