கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளிலும் புறகர் கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய களியாட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 50ஐகூட தாண்டவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இராணுவத்தினரே மைதானம் முழுவதும் நிறைக்கப்பட்டுள்ளனர்.
போட்டிகள் பெரும்பாலானவற்றில் இராணுவத்தினர் கலந்து கொண்டுள்ளதுடன் தெற்கிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களும் போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். இது இராணுவத்தின் களியாட்ட நிகழ்வாகவே நடைபெறுகின்றது.
இதுவரையான நிலவரப்படி இந்த நிகழ்வை கிளிநொச்சி மக்கள் புறக்கணித்திருப்பதை அவதானிப்பதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கிறார். இராணுவத்தினரும்; இராணுவ வாகனங்களும் நிறைக்கப்பட்ட மைதானமாகவே காணப்படுகிறது.
இராணுவத்தினர் களியாட்டத்தை கலகலப்பாக கொண்டாடி வரும்நிலையில் இராணுவத்தினரின் செறிவாக்கலைத் தொடர்ந்து மக்கள் மேலும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
















