இலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குச் செல்லவில்லை. வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நாம் தென்னாபிரிக்காவுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே எமது பயணம் அமையும் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமசந்திரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தென்னா பிரிக்கப் பயணம் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாம் ஒரு போதும் இலங்கை அரசைக் காப்பாற்றவில்லை. சர்வதேசத்திடமிருந்து அவர்களை நாங்கள் பிணையெடுக்க மாட்டோம். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.
தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முழு முயற்சியும் முன்னெடுப்போம். இதேவேளை வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நாம் தென்னா பிரிக்காவுக்கு தெரியப்படுத்தவுள்ளோம் எனவும் தெரவித்தார்.
இங்கு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு என்ன தடையாக உள்ளது என்பதை நாங்கள் விளக்குவோம். இலங்கை அரசினால் போடப்பட்டு வரும் தடைகளை நீக்கித் தருமாறு தென்னாபிரிக்காவிடம் கோருவோம். இதற்கு தென்னா பிரிக்கா எடுக்கும் நடவடிக்கை களைப் பொறுத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் என்று தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தென்னாபிரிக்கா ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தது. இருப்பினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்து வதற்கு ஐ.நா மனித உரிமைகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்வாறான தொரு நிலையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தென்னா பிரிக்கப் பயணம் அமைந்துள்ளது.
















