உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை 04.04.2014 பகல் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார்.

thisa2கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு சம்பிரதாயபூர்வமாக நூல்களை மாற்றும் நடவடிக்கையும் நூலகத்தின் வைபவ ரீதியான திறப்பு விழாவுக்கு நாள் பார்த்து பால்காய்ச்சுதலும் இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக கலந்து கொண்டார்.

பூர்த்தியாகியுள்ள நூலகக் கட்டிடத் தொகுதி, கலைப் பீட கட்டிடத் தொகுதி, வணிக முகாமைத்துவப் பிரிவின் கட்டிடத் தொகுதி உடற்பயிற்சிக்கான கட்டிடத் தொகுதிகள் என்பனவற்றையும் அமைச்சர் பார்வையிட்டதோடு பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற சம்பிரதாய பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
‘இந்த பல்கலைக் கழகத்திலுள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இந்தப் பல்கலைக் கழகத்தின் நவீன நிர்மாண வேலைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் சிரத்தை எடுக்குமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

19 ம் திகதி காலை மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களால் நவீன மயமாக்கப்பட்டு சகல வசதிகளோடும் அமைந்ததாக இந்தப் பல்கலைக் கழகம் திறந்து வைக்கப்பட்வுள்ளது.
எதிர்வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டோடு ஒட்டியதாக பல்கலைக் கழகம் புதுப் பொலிவு பெறவிருக்கின்றது. இந்த திறப்பு விழாவுக்கே அதி உத்தம ஜனாதிபதியவர்கள் இங்கு வருகை தரவிருக்கின்றார்கள்.

இது ஒரு சாதாரண உயர் கல்விக் கூடம் என்றில்லாமல் இதை சர்வதேச உயர் கல்வி நிலையமாக மாற்றும் பிரயத்தனங்களில் நீங்கள் எல்லோருமாக ஈடுபட்டு உலகப் புகழ் பெற்ற ஒரு உயர் கல்வி நிலையமாக இதனைக் காண்பிக்க வேண்டும் .

வேறு பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் அபிவிருத்தியோடு கிழக்குப் பல்கலைக் கழக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கு இடம்பெறும் அபிவிருத்தி மெச்சத்தக்கதாக உள்ளது.’ என்றார் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 18 வது பட்டமளிப்பு விழா நாளை 05 ஆம் திகதி சனிக்கிழமை காலையிலிருந்து மாலை வரை இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply