இலங்கை ஒத்துழைக்காவிடினும் விசாரணையில் தடங்கல் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

sumanthiran1இலங்கை அரசு ஒத்துழைக் காவிட்டாலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணையில் எந்தவிதத் தடங்கலும் இருக்காது. அது சர்வதேச விசாரணை தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இவ்வாறு இலங்கை மீது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அடித்துக் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங் கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக்கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போரின் பின்னர் தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரி விக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தீர்மானத்தின் பின்ன ணியில் செயற்பட்டவர்களுள் ஒருவர் நாடாளுமன்ற உறுப் பினர் சுமந்திரன்.

இலங்கை அரசை எதிர்த்து இம் முறை ஜெனிவாவில் வெளிப் படையாகக் களம் இறங்கியி ருந்த அவர் அது குறித்து உத யனுடன் பகிர்ந்துகொண்டார். “”இலங்கைக்கு எதிராக விசாரணை நடப்பதில் எந்தத் தடங்கலும் இருக்காது. தற்காலத்தில் நடைபெறுகின்ற இத்தகைய பல விசாரணைகள் அந்த நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில்தான் நடந்திருக்கின்றன.

இப்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒரு நாட்டுக்குச் செல்லாமலேயே அந்த நாட்டுக்குள்ளும் விசாரணையைத் திறம்படச் செய்யலாம். இலங்கை விடயத்தில் பல சாட்சிகள் நாட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். விசாரணைக் குழு நாட்டுக்குள் வரவில்லை என்பதற்காக விசாரணையில் தடங்கல் ஏற்படும் என்று நான் நம்பவில்லை” என்கிறார் சுமந்திரன்.

விசாரணைக்கு இலங்கை அரசு முகம்கொடுத்தே ஆக வேண்டும். அந்த விசாரணை விரைவில் நடக்கும். இலங்கை என்னதான் சொன்னாலும் விசாரணையில் இருந்து அவர்கள் தப்பமுடியாது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply