சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசனுடன் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்த நடிகை விசாகாவை உதவி இயக்குனர் ஒருவர் கீழே தள்ளி விட்டதால், விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் விசாகா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார்.
நடிகை விசாகா தற்போது ரவுட் ஃபெலோ என்ற தெலுங்கு படத்தில் நாரா ரோஹித்துடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று முன் தினம் ஐதராபாத்தில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் விசாகா வேகமாக ஓடவேண்டிய ஒரு காட்சியை எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது விசாகா வேகமாக ஓடவேண்டும் என்பதற்காக உதவி இயக்குனர் ஒருவர் பின்னால் இருந்து விசாகாவை வேகமாக தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத விசாகா, நடுரோட்டில் விழுந்தார். இதனால் அவருடைய விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. விசாகாவை பரிசோதித்த மருத்துவர், அவர் நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
நடிகை விசாகா இன்று லண்டன் செல்வதாக இருந்தது. விலா எலும்பு முறிந்ததால், தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார்.

















