உலக தலைவர்கள் சிலரின் தனிப்பட்ட ஆடம்பர சொகுசு விமானங்களை போன்று, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேவைகளுக்காக ஒரு சொகுசு விமானம் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றினையே சொகுசு விமானமாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக சிங்கள செய்திசேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சில நாடு தலைவர்கள் தங்களது பிரயான தேவைகளுக்கான சொகுசு விமானங்களை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும் செலவு கொண்ட இந்த செயற்பாட்டை மஹிந்தவின் மைத்துனரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபருமான நிஷாந்த அவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றவுள்ளதாக கூறப்படுகிறது

















